இந்த ஞாயிறன்று (வலைப்பதிவு) நண்பர் ஒருவரை சந்தித்தேன். பேசிக்கொண்டிருந்தபொழுது ஜனநாயகம் பற்றி பேச்சு வந்தது. நான் அனைவரும் கூடி ஓட்டுப்போட்டு ஆள்பவரை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக முறை சரியான முறை கிடையாதென்றேன். பிளேட்டோ கூறியது போல் ஒரு நல்ல சர்வாதிகாரியே, ஒரு நாட்டை ஆள தகுதியானவன் என்றேன். உதாரணத்திற்கு, நான் அலெக்ஸான்டரை(கி.மு.-கி.பி.) சுட்டிக்காட்டினேன்.
அதற்கு அவர், சர்வாதிகாரியினால் மட்டும் எதையும் சாதித்து விட முடியாது. எல்லோரும் அவன் சொல்வதைத்தான் கேட்டு நடப்பார்கள் என்பது நிச்சயமில்லை. ஒரு கட்டளைக்கு கட்டுப்பட்டு நடப்பதும், நடக்காததும், அவரவர் சூழ்நிலைகளையும், மனப்போக்குமே நிர்ணயிக்கிறது.
ஜனநாயகத்தில் என்னதான் தகுதில்லாதவர்கள் ஆண்டாலும், அந்த தலைமைகளை மாற்றிவிடும் வாய்ப்பு, நமக்கு அவ்வபொழுதாவது கிட்டுகிறதென்றார்.
மேலும் சர்வாதிகாரம் வந்தால் அராஜகம்தான் தலைதூக்கும் என்றார். டால்ஸ்டாயின் வார் அண்ட் பீஸை உதாரணம் காட்டினார்.
நான் நல்ல சர்வாதிகாரி என்று நல்லவில் ஒரு அடிக்கோடிட்டேன். அவர் நல்லது என்பதே சார்பானதுதானே. உங்களுக்கு நல்லதாக இருப்பது என்க்கு கெட்டதாக இருக்கலாம் என்றார். இதற்கு அந்த நேரத்தில் என்னால் பதில் பேச முடியவில்லை.
ஆனால் இப்பொழுதும் என் கருத்தில் மாற்றமில்லை. ஒரு நல்ல, நிர்வாகத்திறமையுள்ள சர்வாதிகாரியால் மட்டுமே ஒரு நல்லாட்சியை கொடுக்க முடியும் என்பது எனது கருத்து. மாற்று கருத்துகள் உங்களுக்கு இருக்கலாம். ஆனால் எனது கருத்து இதுதான்.
Monday, February 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
சுவிற்சலாந்தைப்பொறுத்தவரை அரைவாசி சர்வாதிகாரம். அரைவாசி ஐனநாயகம். இறுக்கமான சட்டங்கள் மூலம் சட்டம் ஒழுங்கை பேணல். ஒரு இடமும் அரக்காத படி ஆரம்பகாலத்தில் இருந்தே இங்குள்ளவர்களது உணர்வகளில் மெதுமெதுவாக புகுத்திவிட்டிருக்கிறார்கள்.. சிவனும் சக்தியும் மாதிரி. எண்டு சொல்லலாம். யாரும் தவறு செய்து தப்பமுடியாது.
Post a Comment