ரொம்ப லேட்தான் என்றாலும், நேற்றுதான் இந்தப் படம் பார்த்தேன். அதனால் இன்று இந்த போஸ்ட். படம் பற்றி மற்றவர்கள் எழுதிய எதையும் நான் படிக்கவில்லை. அதனால் இந்தக் கேள்வியை யாராவது கேட்டாங்களான்னு தெரியலை?
கமல் இந்தப் படத்துல செய்றது/யூஸ் பண்றது மொத்தம் மூன்று பாம் - போலீஸ் ஸ்டேஷன், ஜீப், கடைசியில் தன் சாதனங்களை அழிப்பதற்கு சின்ன சைஸ் ஒன்று. ஓகே. மற்ற எந்த இடத்திலும் பாம் வைக்கவில்லை என்று மோகன்லாலிடம் கடைசியில் சொல்கிறார். வேறு எந்த இடத்திலும் பாம் வைக்கவில்லையென்றால், எதற்காக ஆரம்பத்தில் கமல், பஸ், ஷாப்பிங் மால், ட்ரெய்ன் ஆகியவற்றில் பைகளை விடுவதை விலாவரியாக காட்டுகிறார்கள். போலீஸை ஏமாற்றுவதற்கா? அவங்களுக்குத்தான் பாம் வைக்கிறதே தெரியாதே?! லாஜிக் ப்ளீஸ்!
இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்தவர்கள் தயவு செய்து எனக்கு பின்னூட்டத்தில் சொல்லவும்.
பி.கு.:- அனேகமா ஒரு பின்னூட்டம் கூட வராது என்று நம்புகிறேன்!!!
Tuesday, October 6, 2009
Subscribe to:
Posts (Atom)