Tuesday, October 6, 2009

உ.போ.ஒ. எவ்ளோ பெர்யயய ஓட்டட?

ரொம்ப லேட்தான் என்றாலும், நேற்றுதான் இந்தப் படம் பார்த்தேன். அதனால் இன்று இந்த போஸ்ட். படம் பற்றி மற்றவர்கள் எழுதிய எதையும் நான் படிக்கவில்லை. அதனால் இந்தக் கேள்வியை யாராவது கேட்டாங்களான்னு தெரியலை?

கமல் இந்தப் படத்துல செய்றது/யூஸ் பண்றது மொத்தம் மூன்று பாம் - போலீஸ் ஸ்டேஷன், ஜீப், கடைசியில் தன் சாதனங்களை அழிப்பதற்கு சின்ன சைஸ் ஒன்று. ஓகே. மற்ற எந்த இடத்திலும் பாம் வைக்கவில்லை என்று மோகன்லாலிடம் கடைசியில் சொல்கிறார். வேறு எந்த இடத்திலும் பாம் வைக்கவில்லையென்றால், எதற்காக ஆரம்பத்தில் கமல், பஸ், ஷாப்பிங் மால், ட்ரெய்ன் ஆகியவற்றில் பைகளை விடுவதை விலாவரியாக காட்டுகிறார்கள். போலீஸை ஏமாற்றுவதற்கா? அவங்களுக்குத்தான் பாம் வைக்கிறதே தெரியாதே?! லாஜிக் ப்ளீஸ்!

இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்தவர்கள் தயவு செய்து எனக்கு பின்னூட்டத்தில் சொல்லவும்.

பி.கு.:- அனேகமா ஒரு பின்னூட்டம் கூட வராது என்று நம்புகிறேன்!!!

5 comments:

வரதராஜலு .பூ said...

இப்பிடில்லாம் கூடவா கேள்வி யோசனை(ரூம் போட்டா, போடாமலா?) பண்ணி கேப்பிங்க?

உங்களுக்காவது ஒரு பின்னூட்டம் நான் போட்டிருக்கேன். எனக்கு க்ளைமாஸ்ல ஒரு டவுட். அத பத்தி என்னோட பதிவுல (http://varadaradj.blogspot.com/2009/10/my-views.html) கேட்டிருக்கேன். அதுக்கும் யாரும் இதுவரைக்கும் பதில் சொல்லல. என்ன பண்றது போங்க.

Unknown said...

Assumption:மீதியெல்லாம் சும்மா டம்மி.ஏன்னா அவன் நம்மைப்போல்
ஒருவன்(காமன்மேன்) அவனோடு டார்கெட் தீவரவாதிங்கதான்.

ஹாலிவுட் படம்போல் கதை போகிற போக்கில் புரிந்துக்கொள்ள வேண்டும்.
மற்ற படம் போல் கோனார் நோட்ஸ் போட முடியாது.

முடிந்தால் என் விமர்சனம் படிக்கவும்.

வரதராஜலு .பூ said...

நீஙகள் சொல்வதை நான் ஒத்துகொண்டாலும், இந்த டவுட்டே இதில் பயன்படுத்தும் டெக்னாலஜி தொடர்பாக விஷய ஞானம் நமக்கு இருப்பதாலே வருகிறது. சிறு வயதில் பல ஆங்கிலபடங்கள் மொழி புரியாமல் பார்த்து ரசித்ததுண்டு. மொழி பிரச்சனை காரணமாக பல நகைச்சுவைகள், லாஜிக் என்று பலதும் புரியாது. ஆனால் இப்போதும் அப்படியே இருக்கமுடியுமா?

யோசிப்பவர் said...

ரவிஷங்கர்,
நான் கேட்கிற கேள்வியை சரியாக புரிந்து கொள்ளுங்கள். காமன் மேனுக்கு பொது இடங்களில் பாம் வைக்கும் நோக்கம் இல்லை. ஒரே ஒரு உண்மையான பாம் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து, போலீஸை மிரட்டி தீவிரவாதிகளை விடுவிக்க வைப்பதுதான் அவனது திட்டம். அப்படியிருக்க பைகளை(அவை டம்மியாயிருந்தாலும்) ஏன் அவன் வேலைமெனக்கெட்டு பொது இடங்களில் பைகளை விடுகிறான்?

போலீஸ் ஸ்டேஷனில் மட்டும் பாம் பையை வைத்து விட்டு, போலீஸை மிரட்டினால் போதுமே?

கோனார் நோட்ஸ் தேவையில்லை. கொஞ்ஞூண்டு லாஜிக் ப்ளீஸ்!!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ரைட்..,