தமிழ் பதிவுகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து செல்கிறது. அதே வேகத்தில் தமிழின் தரம் வீழ்ந்தும் செல்கிறது. ஒரு பக்கம் "மொக்கை, அடிவருடி, நாய் .. " போன்ற (இதைவிட மோசமான) வார்த்தைகளால் எண்ணங்களின் தரமும், ('ல','ள','ழ')('ர','ற')(ண,ன,ந) வேறுபாடுகள் பற்றி கவலையில்லாததால் எழுத்தின் தரமும், தமிழுக்கு ஒரு மிக மோசமான சூழ்நிலையை, வலையில் ஏற்படுத்தியிருப்பதாகவே நான் உணர்கிறேன். எண்ணங்களின் தரத்தைப் பற்றி நான் இப்பொழுது எதுவும் கூறப்போவதில்லை. ஏனென்றால், அது உங்களின் தரத்தை பொறுத்தது. குறைந்த பட்சம், எழுத்தின் தரத்தையாவது முடிந்தவரை கெடுக்காமல் இருக்கலாமே!
வர வர இந்த மாதிரி ('ல','ள','ழ')('ர','ற')(ண,ன,ந) வேறுபாடுகள் தெரியாத பலரின் எழுத்துகளை வலையில் படிக்க நேருகிறது. அப்பொழுதெல்லாம் பயங்கரமாக கோபமும் வருகிறது. உங்களுக்கு குறிப்பிட்ட வார்த்தையில் எந்த எழுத்து வரும் என்பது பற்றி சந்தேகம் இருந்தால், அகராதியில் அந்த வார்த்தை எப்படியிருகிறது என்று பாருங்கள். இல்லையென்றால் யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். அப்படியும் தெரியவில்லையென்றால், பேசாமல் அதற்குரிய ஆங்கில வார்த்தையையே எழுதுங்கள். வார்த்தையை தப்பாக எழுதுவதை விட, ஆங்கிலச் சொல்லை உபயோகிப்பது தவறல்ல என்பது என் கருத்து.
சில சமயங்களில் தட்டச்சும்பொழுது, நம்மையறியாமல் கவனக்குறைவாக எழுத்து தவறாகியிருக்கலாம். இது ஒரு பெரிய தவறில்லைதான். எனக்கும் பல முறை நிகழ்வதுண்டு. ஆனால் இதையும் முடிந்தவரை குறைக்கலாம். தட்டச்சு செய்து முடித்த பிறகு ஒரு முறைக்கு மூன்று முறை எழுதியதை படித்துப் பாருங்கள், அவசரமில்லாமல்!! அப்படி படிக்கும்பொழுது எழுத்திலுள்ள கருத்தை கவனிக்காமல் வார்த்தை வார்த்தையாக படியுங்கள். ஏதாவது தவறிருந்தால் அப்பொழுது கண்டிப்பாகத் தெரிய வரும். ஆனால் நம்மில் பலரும் இந்த proofபார்க்கும் வேலையை செய்வதில்லை. தட்டச்சி முடித்ததும் பதிவிட்டிட வேண்டும் என்று அவசரப்படுகிறோம். அவ்வளவு விரைவாக கருத்துக்களை முந்தி தந்து என்ன சாதிக்க போகிறீர்கள்?
ஆனால் இப்படி proof பார்த்து எழுதினால் கூட உங்களுக்கு தப்பு வருகிறதா? பேசாமல் ஒரு நல்ல தமிழ் வாத்தியாரிடம் ட்யூஷன் ('ட்யூஷன்' இப்பொழுது தமிழ் வார்த்தையாகிவிட்டது?!?!) சேர்ந்து விடுங்கள்.
Thursday, June 28, 2007
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
...அதுவும் இல்லையெனில் இங்கே சென்று இலவசமாகவே இலக்கணம் கற்றுக் கொள்ளுங்கள்! :)
http://www.pudhucherry.com/pages/gram.html
யோசிப்பவர்,
சரியாகவே சொல்லி இருக்கிறீர்கள். என்னுடைய பதிவுகளிலும் தட்டச்சும் தவறுகள் வருகின்றன. ஒரு முறைக்கு இருமுறை சரிபார்க்க துவங்கியதிலிருந்து ஓரளவு குறைந்திருக்கிறது. என்னைப்பொருத்த அளவில் சுட்டிக்காட்டினால் கட்டாயம் சரிசெய்கிறேன். இந்த இந்த இடத்தில் தவறுகள் என்று பேசாமல் பின்னூட்டத்தில் போட்டுவிடலாமா என்று பலமுறை நான் கூட நினைத்ததுண்டு . ஆனால் கோபிதுக்கொள்வார்களே என்று பயமாய் இருக்கிறது.
நல்ல யோசனைதான்.
முயற்சி செய்கிறேன்.
சுட்டிக்கு நன்றி இளவஞ்சி!!!;-)
Sathia, //இந்த இந்த இடத்தில் தவறுகள் என்று பேசாமல் பின்னூட்டத்தில் போட்டுவிடலாமா என்று பலமுறை நான் கூட நினைத்ததுண்டு . ஆனால் கோபிதுக்கொள்வார்களே என்று பயமாய் இருக்கிறது. //
இந்த இந்த இடத்தில் தவறுகள் 'இருக்கின்றன' என்று சொல்லாமல் 'இருப்பது போல் தெரிகிறதே' என்று சொல்லிப் பாருங்கள். பெருவாரியானவர்கள் கோபப்படாமல் திருத்திக் கொள்வார்கள்!!;-)
துளசி கோபால்,
கண்டிப்பாக முயற்சி செய்யுங்கள்!!!;-)
சொன்னாலும் மாற்றவிட்டால் என்ன செய்ய முடியும்?எனக்கும் தமிழில் எழுத்துப் பிழைகளைக் கண்டால் சும்மா இருக்க முடியவில்லை.சில வலைப்பதிவாளர்களுக்கு அதை சுட்டி காண்பித்து உள்ளேன்.ஆனால் பலர் அதைப் பற்றி கண்டு கொள்வதே இல்லை :(
I should read up... I am really not good at this. Will try my best soon..
but most of my mistakes occur cause I am in a hurry.
i blog from office.. a risky business.. when i have so many things to do.. inclusing in the blogshere.
:))
thanks for your concern though.
//...அப்படியும் தெரியவில்லையென்றால், பேசாமல் அதற்குரிய ஆங்கில வார்த்தையையே எழுதுங்கள். வார்த்தையை தப்பாக எழுதுவதை விட, ஆங்கிலச் சொல்லை உபயோகிப்பது தவறல்ல என்பது என் கருத்து.// உங்களுடைய இந்தக் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனாலும், புதிய வார்த்தைகள் கற்றுக் கொள்வதை விட, இருப்பவற்றை சரியாகச் செய்தால் சிறப்பு என்பது என் எண்ணம். தற்போது எழுத்துக்களும், சந்திப்பிழைகளும் அதிகமாகவே இருக்கின்றன. என்ன செய்யப் போகிறீர்கள் அதற்கு? உங்களுக்குத் தெரிந்த வலைத்தள நண்பர்களுக்குச் சொல்லுங்கள், பிழையில்லாமல் எழுதுவதற்கு. அதற்கு முன், தாங்களும் அதை கடைபிடிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். இது நாம் தமிழுக்காற்றும் நன்றிக் கடனாய் இருக்கட்டுமே!
கவிதைகளுடன்,
சகாரா.
Post a Comment