Sunday, November 25, 2007

தினமணிக் கதிரில் நிலாரசிகன்

இன்றைக்கு தினமணிக் கதிரில், நண்பர் நிலாரசிகனின் இரண்டு இரு நிமிடக் கதைகளை(14வது கதை, இடுகாடு), அவருடைய வலைபதிவிலிருந்து எடுத்து பிரசுரித்திருக்கிறார்கள். நிலாரசிகனின் எழுத்துக்கள் அச்சுப் பிரசுரம் ஆவது இது முதல் முறை அல்லவென்றாலும், கதை என்ற கூறில், இதுவே அவரின் முதல் அச்சுப் பிரசுரம். அவருக்கு எனது வாழ்த்துக்கள்!!!


பி.கு.: ஏனோ தினமணியின் இணைய தளத்தில் அந்தப் பக்கம் இல்லை.

3 comments:

Boston Bala said...

தகவலுக்கு நன்றி :)

--கடலிலே நீங்கள் எவ்வளவு புயல்களை சந்தித்தீர்கள் என்பதைப் பற்றி உலகத்திற்கு அக்கறையில்லை. கப்பலை கரைக்கு கொண்டு வந்து சேர்த்தீர்களா? அதில்தான் அக்கறை.--

கலக்கல்!

யோசிப்பவர் said...

பாபா,
எந்த தகவலுக்கு நன்றி?
//--கடலிலே நீங்கள் எவ்வளவு புயல்களை சந்தித்தீர்கள் என்பதைப் பற்றி உலகத்திற்கு அக்கறையில்லை. கப்பலை கரைக்கு கொண்டு வந்து சேர்த்தீர்களா? அதில்தான் அக்கறை.--

கலக்கல்!
//
இந்தத் தகவலுக்கா? இல்லை நிலாரசிகனைப் பற்றிய தகவ்லுக்கா?
;-))

உங்களை ரொம்ப நாட்களாக ஒன்று கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆமாம், ஏன் உங்களை எல்லாரும் 'பாபா' என்று அழைக்கிறார்கள்? நியாயமாக 'போபா' (போஸ்டன் பாலா) என்றுதானே அழைக்க வேண்டும்!!;-)))

நிலாரசிகன் said...

நன்றி யோசிப்"பவரே".
:)