Monday, December 24, 2007

வா, வாங்க, வாங்களேன்


நேற்று கிழக்கு பதிப்பகத்தில் நடந்த சந்திப்பில் அகராதி, Spell Check பற்றி பேச்சு வந்தபொழுது, "வா" என்ற சொல்லுக்கு மட்டும் கிட்டத்தட்ட 300 வடிவங்கள் இருப்பதாக சொன்னார்கள்(உதாரணத்திற்குத்தான் சொன்னார்கள்!). அதாவது வாங்க, வருகிறேன், வந்தாய் போன்ற சொற்களெல்லாம் "வா" என்ற வினைச் சொல்லின் வடிவங்களே. சந்திப்பு முடிந்து வீட்டுக்கு வந்ததும்தான் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. 300 வடிவங்கள் என்பது ரொம்பவும் அதிகப்படியாக எனக்கு தோன்றுகிறது. 100 வடிவங்கள் இருந்தாலே அதிகம்தான் என்று எனக்குத் தோன்றுகிறது. எதற்கு வீண் சந்தேகம்?
உங்களுக்குத் தெரிந்த "வா" வடிவ சொற்களையெல்லாம் பட்டியலிட்டு சொல்லுங்களேன். சோதனை செய்து பார்த்து விடுவோம்!!

3 comments:

Badri Seshadri said...

300 இல்லை. 3000-க்கும் மேல்! நாளை முடிந்தால் எல்லாவற்றையும் கொடுக்கிறேன்.

கூமுட்டை said...

>>>>
நானே குழப்பத்தில் இருக்கிறேன். புடிச்சு கட்டிக்கனுமா? புடிக்காமலேயே கட்டிக்கலாமா?;-))
<<<<
தலைவா, கல்யாண நேரம் வந்தாச்சா ?
!!! வாழ்த்துக்கள் !!!

இரசிகை said...

vaa..
vaanga..
vanthudunga..
varukiren..
varanum..
vanthutten..
.......... avavalavuthaan varuthunga(ithulayum vaa)