Thursday, September 11, 2008

பிரபல பத்திரிக்கையின் தமிழார்வம்?!

தற்செயலாக "நாணயம் விகடன்" அட்டைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது.
"ஐ போன்
என் 96
எது பெஸ்ட்?"
என்ற தலைப்பு கண்ணில் பட்டது. ஐ போன் தெரியும். அது என்ன "என் 96" என்று சில நிமிடம் தடுமாறினேன். அப்புறம் அது "N96" என்று புரிந்தது. அடடே, பரவாயில்லையே! தமிழார்வம் ஓவரா இருக்குதே, என்று எண்ணியவாறே வலது புறம் பார்த்தபொழுது(அதே பக்கத்தில்)
"32 பக்க
L.K.G. இணைப்பு
கிரெடிட் கார்டு"
என்று இன்னொரு தலைப்பு. "L.K.G"யை "எல்.கே.ஜி" என்று எழுதினால்கூட எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய அளவில் அந்த வார்த்தை நமக்குத் தெரியும். அதை "LKG" என்றே போட்டிருக்கிறார்கள். ஆனால் N96ஐ "என் 96" என்று போட்டால் எத்தனை பேருக்கு சட்டென்று புரியும். தமிழார்வம் ஓவர்னா LKGஐயும் "எல்.கே.ஜி"னே போட்டிருக்கலாமில்லையா? ஸோ, தமிழார்வம் சுத்தமாயில்லை. அப்புறம் என்ன "என் 96" வாழுது? "N96"னு போட்டா படிக்கிறவனுக்காவது புரியுமில்ல? தமிழார்வம் ஃபுல்லா அரிச்சு போச்சுங்க!!!