Friday, September 12, 2008

தமிழ்மணம் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?

சிறிது நேரத்திற்கு முன்பு, பாரிஸ் திவா, மங்களூர் சிவாவின் பெயரை வைத்து இட்டிருந்த அருவருப்பான பதிவின் தலைப்பை பார்க்க நேர்ந்தது. அதை எதிர்த்து இடப்பட்டிருந்த பின்னூட்டங்களின் புண்ணியத்திலேயே, ரொம்ப நேரம் தமிழ்மண முகப்பில் தெரிந்தது. இப்பொழுது அது நீக்கப்பட்டுவிட்டது, என்றாலும், செய்த தவறுக்கு பாரிஸ் திவா மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்காத பட்சத்தில் தமிழ் மணம் ஏன் அவர் மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது? மேலும அவர் பதிவில் பல புதிய படங்களின் வீடியோக்களையும்(முழுப் படம்) போட்டிருக்கிறார். இது திருட்டு வீடியோ குற்றமில்லையா? குறைந்த பட்ச நாகரிகமும் கிடையாது, குறைந்தபட்ச நேர்மையும் கிடையாதா?

27 comments:

ஜோசப் பால்ராஜ் said...

உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன். கட்டாயம் இது போன்ற இடுகைகளை தமிழ்மணம் கட்டுப்படுத்த வேண்டும்.

நண்பர் சஞ்சய் , மங்களூர் சிவாவின் திருமண புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ள இந்தப் பதிவை பாருங்கள்.

http://podian.blogspot.com/2008/09/blog-post_12.html

எவ்வளவு கண்ணியமாக அத்தனை கூட்டத்திலும் பெண்களைத் தவிர்த்து ஆண்களின் படங்களை மட்டும் வெளியிட்டுள்ளார். இந்த கண்ணியம் ஏன் பாரிஸ் திவாவிற்கு இல்லை ?
அவரது பதிவை விட அதற்கு வந்த முகமில்லாதவர்களின் பின்னூட்டமோ அதைவிடக் கேவலம்.

சென்ஷி said...

:(

எதிர்ப்பில் இணைகின்றேன்..

இளைய கவி said...

நானும் என்னுடைய எதிர்ப்பை இங்கு பதிவு செய்கிறேன். தமிழ்மணம் சீக்கிறமே தமிழ் நாற்றமாகி போவது உறுதி

என்றும் அன்புடன்
இளையகவி.

பரிசல்காரன் said...

வழிமொழிகிறேன்

யோசிப்பவர் said...

இப்பொழுது இந்த கேவலமான தலைப்பு, சூடான இடுகைகளில் தொங்கிக் கொண்டு இருக்கிறது.:(

நிலாரசிகன் said...

வழிமொழிகிறேன்.

MSK / Saravana said...

வழிமொழிகிறேன்..

குரங்கு said...

நான் அவரின் பதிவை பாக்கவில்லை...

அப்படி என்ன போட்டுடார்?

யோசிப்பவர் said...

குரங்கு,

பார்க்கவில்லையென்றால் நல்லது. புண்ணியம் செய்திருக்கிறீர்கள்!!

அந்தப் பதிவின் தலைப்பு, இன்னமும் தமிழ்மண சூடான இடுகைகளில், முதலாவதாக இருக்கிறது!:(

வெண்பூ said...

புரியல யோசிப்பவர். இந்த இடுகையை போடுறதுக்கு முன்னால ஒரு நிமிசம் யோசிக்க மாட்டாரா? நம்மள பத்தி எவனாவது இப்படி போட்டா எப்படியிருக்கும்னு.

நம்மளுக்குள்ள கிண்டல் அடிச்சிக்கிறதெல்லாம் ஓகே. அதுக்கும் ஒரு அளவு இருக்குல்ல. :(

வெண்பூ said...

FYI... நல்லவேளை நான் அதை படிக்கவில்லை.

பாலபாரதி உள்ளிட்ட மற்ற பெயர் பெற்ற பதிவர்களையும் இது கடுப்படித்திருப்பது தெரிகிறது. யாராவது தமிழ்மணத்திற்கு சொல்லி அதை சூடான இடுகையில் இருந்து எடுக்க சொல்லுங்களேன்.

காஞ்சனை said...

நிச்சயமாய் நடவடிக்கை எடுக்கலாம். அத்தோடு சூடான இடுகைகளை கொஞ்சம் பரிசீலித்தால் தேவலை

RATHNESH said...

தலைப்பினைக் குறித்த தங்கள் கருத்தும் எதிர்ப்பும் பாராட்டுக்குரியவை. நியாமான உணர்வுகள். வாழ்த்துக்கள்.

யோசிப்பவர் said...

வெண்பூ,
//நம்மளுக்குள்ள கிண்டல் அடிச்சிக்கிறதெல்லாம் ஓகே. அதுக்கும் ஒரு அளவு இருக்குல்ல.//
இதை அவர் "நகைச்சுவை"ன்னு வேற வகைப்படுத்தியிருந்தார்.

தமிழ்மணத்திற்கு மெய்ல் அனுப்ப வேண்டும். இப்போதைக்கு எனக்கு முடியாது. இன்னும் ஐந்து மணி நேரமாவது ஆகும். அதற்குள் வேறு யாராவது மெய்ல் அனுப்பி, அல்லது ஃபோனில் பிடித்து, அல்லது நிர்வாகிகள் அவர்களாகவே பார்த்து நீக்கினால் சந்தோஷம்.

Anonymous said...

உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன். எதிர்ப்பில் இணைகின்றேன்..

Tech Shankar said...

ஆர்வம் இருக்கலாம். ஆனால் ஆர்வக்கோளாறு இருக்கக்கூடாது.

Tech Shankar said...

வீட்டுப்பெண்களைக் கேவலப்படுத்தக் கூடாது. நான் எனது பதிவுகளில் எனது பையனின் புகைப்படத்தினை, எனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளேன். ஆனால் வீட்டுப்பெண்களின் போட்டோவை நல்லவிதத்தில் பயன்படுத்தலாம்.

வீட்டுப்பெண்கள் - பரீட்சை முடித்துப் பட்டம் வாங்கிய போட்டோ போன்றவை.

ஆனால் அவர்களைத் தரம் தாழ்த்தக்கூடாது - என்பது எனது வாதம்.

கூடுதுறை said...

நானும் வழிமொழிகிறேன்

Anonymous said...

உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன். கட்டாயம் இது போன்ற இடுகைகளை தமிழ்மணம் கட்டுப்படுத்த வேண்டும். //
தமிழ்மணம் சீக்கிறமே தமிழ் நாற்றமாகி போவது உறுதி//
நானும் வழிமொழிகிறேன்//

Anonymous said...

முன்னர் அவர் முழுப்படத்தினையும் வெளியிட்டபோது, தமிழ்மணம் ஏற்கனவே அந்த இடுகையை நீக்கியிருந்தது.

அடுத்தது இளையகவி தமிழச்சி, கவிதை என்ற பெயரிலே ஏதாவது வம்பு செய்வார். உடனே எல்லோரும் சேர்ந்து லைனிலே நின்னு தமிழ்மணத்தை மொத்துங்கள்.

இன்னிக்கு முத்தமிட்டுக்கொள்ளுங்கள். நாளைக்கு முறைத்துக்கொள்ளுங்கள். எல்லாத்துக்கும் தமிழ்மணத்தை உதைத்துக் கொல்லுங்கள்.

அண்ணா, தம்பி, கலாய்ப்பு, காயலான்கடை என்று கட்டியணைக்கும் நீங்களே தம்பிகளுக்குத் தப்பைச் சொல்லினால் ஆச்சே. எதுக்கு தமிழ்மணம்?

இளையகவி நாற்றம் அடிக்காமலா இதுவரை நாள் பதில் போட்டார்?

யோசிப்பவரே, நீங்கள் சரியான நோக்கத்தோடுதான் பதிவிட்டிருக்கிறீர்கள். ஆனால், இளையகவி போன்றவர்கள் போடும் ஓசையிலே தமிழ்மணத்தை அடிப்பதுதான் முக்கியமாக ஆகிறது என்பதையும் கவனியுங்கள்.

யோசிப்பவர் said...

அனானி,
தமிழ்மணத்தை நான் குறை சொல்லவில்லை. அவர்கள் கவனத்துக்கு கொண்டு சென்று, இது போன்ற பதிவுகளை தடை செய்ய முயற்சி எடுக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். இளைய கவியின் பின்னூட்டத்தில் "தமிழ் மணம் தமிழ் நாற்றமாகிப் போகும்" என்று இங்கு குறிப்பிட்டிருக்கிறார். இது போன்ற பதிவுகள் தொடர்ந்து வந்தால் தமிழ்மணம் அப்படிப்பட்ட, ஒரு இடமாக மாறி விடும், என்றே அவரது கூற்றை நான் புரிந்து கொண்டேன்(எனது புரிதல் தவறாக கூட இருக்கலாம்). இங்கு தமிழ்மணத்தையோ, தமிழ்மணம் நிர்வாகிகளையோ, இது குறித்து வசையாடுவதை நான் அனுமதிக்க மாட்டேன்.

பி.கு.: நீங்களும் பெயருடனேயே உலா வரலாமே?!

A Blog for Edutainment said...

I am afraid about this kind of Post from Genuine Person.

நம்மளுக்குள்ள கிண்டல் அடிச்சிக்கிறதெல்லாம் ஓகே. அதுக்கும் ஒரு அளவு இருக்குல்ல. :(

You are absolutely correct

Anonymous said...

யோசிப்பவரே இது உங்களைக் குற்றம் சொல்லவல்ல. அதைத் திருத்தமாகச் சொல்லியிருந்தேனே?

ஏங்க நீங்க இளையகவி, பாரிஸ்திவா இவங்க தமிழச்சி பேர்ல தமிழ்மணத்துல ரோட்ரோலர் ஓசை போட்டே ஓட்டினத கண்டதே இல்லையா? அப்பாவிங்க.


பிகு: யோசிப்பவர் என்பதற்கும் அநாநி என்பதற்கும் அடையாளபேதம் ஏதும் இருக்கிறதா?

யோசிப்பவர் said...

//யோசிப்பவரே இது உங்களைக் குற்றம் சொல்லவல்ல. அதைத் திருத்தமாகச் சொல்லியிருந்தேனே?//

எனக்குப் புரிந்தது அனானி.

பி.கு:
//பிகு: யோசிப்பவர் என்பதற்கும் அநாநி என்பதற்கும் அடையாளபேதம் ஏதும் இருக்கிறதா?//
நிச்சயம் இருக்கிறது நண்பரே. ”யோசிப்பவர்” என்பது போல் ஏதாவது பூனைப் பெயராவது வைத்துக் கொள்ளலாமே?!

Anonymous said...

//பிகு: யோசிப்பவர் என்பதற்கும் அநாநி என்பதற்கும் அடையாளபேதம் ஏதும் இருக்கிறதா?//
நிச்சயம் இருக்கிறது நண்பரே. ”யோசிப்பவர்” என்பது போல் ஏதாவது பூனைப் பெயராவது வைத்துக் கொள்ளலாமே?!

இதற்கு பேர்தான் சப்பை கட்டா? பல பேர் இப்படித்தான் யோக்கியன் வேசம் போடுறானுங்க..

இதை தவறாமல் வெளியிடவும்

யோசிப்பவர் said...

இதில் என்ன சப்பைக்கட்டு இருக்கிறது என்று புரியவில்லை. மேலும் யோக்கியன், அயோக்கியன் பிரச்சினை இதில் எங்கு வந்தது? பதில் சொல்லும்பொழுதும், கேள்வி கேட்கும்பொழுதும் தேவைப்படும் ஒரு தனியடையாளத்துக்காகவே ஏதாவது ஒரு பெயர் கேட்டேன்.

இந்த விவாதம், இந்தப் பதிவின் கருத்துக்கு சம்பந்தமில்லாததால், இத்துடன் முடிக்க விரும்புகிறேன். மேலும் தொடர விரும்பினால், தனிப் பதிவாக போடவும். தொடரலாம்.

Anonymous said...

//Anonymous said...
முன்னர் அவர் முழுப்படத்தினையும் வெளியிட்டபோது, தமிழ்மணம் ஏற்கனவே அந்த இடுகையை நீக்கியிருந்தது.

அடுத்தது இளையகவி தமிழச்சி, கவிதை என்ற பெயரிலே ஏதாவது வம்பு செய்வார். உடனே எல்லோரும் சேர்ந்து லைனிலே நின்னு தமிழ்மணத்தை மொத்துங்கள்.

இன்னிக்கு முத்தமிட்டுக்கொள்ளுங்கள். நாளைக்கு முறைத்துக்கொள்ளுங்கள். எல்லாத்துக்கும் தமிழ்மணத்தை உதைத்துக் கொல்லுங்கள்.

அண்ணா, தம்பி, கலாய்ப்பு, காயலான்கடை என்று கட்டியணைக்கும் நீங்களே தம்பிகளுக்குத் தப்பைச் சொல்லினால் ஆச்சே. எதுக்கு தமிழ்மணம்?

இளையகவி நாற்றம் அடிக்காமலா இதுவரை நாள் பதில் போட்டார்?

யோசிப்பவரே, நீங்கள் சரியான நோக்கத்தோடுதான் பதிவிட்டிருக்கிறீர்கள். ஆனால், இளையகவி போன்றவர்கள் போடும் ஓசையிலே தமிழ்மணத்தை அடிப்பதுதான் முக்கியமாக ஆகிறது என்பதையும் கவனியுங்கள்.
//

இதே கருத்தை கிட்டத்தட்ட கொழுவி பதிவில் பெயரோடு தெரிவித்திருப்பவர் பெயரிலி.

பெயரிலி அனானியாகவும் கமெண்டுகள் போடுவேன் என்று ஜ்யோவ்ராம் சுந்தரிடம் சொல்லியிருக்கிறார்.

அதற்காக இந்த அனானி பின்னூட்டத்தை போட்டவர் பெயரிலி என்று சொல்லவில்லை. பெயரிலியாகவும் இருக்கலாம்.

இன்னொரு அனானி