நான் இதை எழுதியிருக்கக் கூடாது. இருந்தாலும் மனம் கேட்கவில்லை. சிறில் அலெக்ஸ் நடத்திய அறிபுனைக் கதைகள் போட்டி முடிவுகள் ஒரு வழியாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வசந்தகுமார், ஸ்ரீதர் நாராயணன், சேவியர், மூவரும் பரிசுக்குத் தகுதியானவர்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முதல் பரிசுக்குத் தேர்வாகியிருக்கும் கதைதான் ரொம்பவே நெருடுகிறது. போட்டி நடத்தப்பட்டது அறிவியல் புனைக்கதைகளுக்கு. ஆனால் முதல் பரிசு பெற்ற கதை, அந்த வகையில் அடங்காது என்பது எனது கருத்து. அது ஒரு வித்தியாசமான கதையே தவிர, அறிவியல் புனைவு அல்ல. வசந்தகுமார், இந்த போட்டிக்காக கிட்டத்தட்ட 15 கதைகள் எழுதிய நிலையில், அவற்றில் ஒரு அறிவியல் புனைவு கூடவா பரிசுக்கு சிக்கவில்லை?
ஸ்ரீதரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை கூட, போட்டிக்கு வந்த அவரது மற்ற கதைகளை விட சில படிகள் குறைவான கதைதான் என்பது எனது கருத்து. ஆனால் ஒவ்வொருவர் ரசனையும் வேறு விதமாக இருக்கலாம் என்பதாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கதை அறிவியல் புனைவு கூறுக்குள் அடங்குவதாக இருப்பதாலும், இந்த விஷயத்தை விட்டு விடலாம்.
பரிசு கொடுப்பது, மேலும் அது போன்ற ஆக்கங்கள் தொடர்ந்து வர ஊக்குவிப்பதற்குத்தான். அதனால், பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், அவர்கள் எழுதிய மற்ற சிறந்த கதைகளை விட, இது போன்ற கதைகளை தொடர்ந்து எழுதினால்தான் அவை அறிபுனை கதைகள் என்று ஏற்றுக் கொள்ளப்படும், என்று மனதளவில் நினைக்கும் அபாயம் நிறையவே இருக்கிறது. போட்டிக்கு எழுதிய மற்ற எழுத்தாளர்களும், அறிவியல் கூறுகளோடு கதை எழுதினால், அவை ஏற்றுக் கொள்ளப்படாது என்ற மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
அதனால், அறிபுனை எழுத்தாளர்களே!! இந்தப் போட்டியின் முடிவு உங்களது எண்ணங்களையும், ஆக்கங்களையும் பாதிக்காமல், தொடர்ந்து அறிவியல் கூறுகள் கொண்ட அறிபுனை கதைகளையும் எழுதி, தமிழில் அந்தக் கூறு மேன்மேலும் வளரச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்!!
எனது இந்த நிலையை முதல் பரிசு பெற்ற நண்பர் இரா.வசந்த குமார் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்!!
Tuesday, October 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
I did not participate but I echo the same feelings! (as a writer who has written 2000+ poems and 200+ stories in many languages)
Even though the language format is not understood by me!
This isn't any yardstick!
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!
என் பதிவை படித்தீர்களா யோசிப்பவர்?
நல்ல கருத்துக்கள். தேர்வாளர் தன் கருத்துக்களை முன்வைத்திருந்தார். முன்பே இது குறித்து சொல்லியிருக்கலாம். ஒரு casual போட்டியாகவே இது நடத்தப்பட்டதால் அத்தனை விபரங்கள் சொல்லவில்லை.
இருப்பினும் நீங்கள் சொல்லியிருப்பதைப்போலவே தூய அறிவியல் கொள்கைகளை முன்வைத்த கதைகள் தமிழில் வரவேண்டும் அதே வேளையில் வெறுமனே கண்டுபிடிப்புக்கள் தவறாக செயல்படுவது etc போன்ற தேய்வழக்கக் கதைகளை மீண்டும் மீண்டும் எழுதுவதை தவிர்க்கலாம்.
நேரடியாக முன்வந்து உங்கள் கருத்தை தெரிவித்ததற்கு நன்றி.
முடிவுகளில் எனக்கும் சற்று ஆதங்கம் அதிகம் இருந்தது. ஆனாலும் இது சகஜம்தான் போல என்று நினைத்துக்கொண்டேன் :)
வசந்த குமாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :)
மிக அழகாகச் சொல்லிவிட்டீர்கள். உண்மையிலேயே வெற்றி பெற்ற இருவரின் வேறு கதைகள் இன்னும் மேலானதாக இருந்தன என்பது என் எண்ணமும். அதே போல் வெண்பூ வெற்றி பெறுவார் என்று நினைத்தேன். இதிலும் வெகுஜன ரசனை புறக்கணிக்கப்படும் போலும்!
அனுஜன்யா
Post a Comment