Tuesday, October 30, 2007

கவிதை மாதிரி...

பிணமான பின்னும்
'கியூ'வில் காத்திருக்கிறேன்,
எரிவதற்காக -
எலெக்ட்ரிக் சிதையில்.

Tuesday, October 23, 2007

விகடன் செய்ததும் நியாயமில்லை

ஞானி எழுதியது சரியா இல்லையா என்பது ஒரு புறம். ஆனால் விகடன் செய்தது சிறிதும் நியாயமில்லை.

ஒரு கட்டுரை பிரசுரத்திற்கு போகும் முன்பே, அது தொடர் கட்டுரையாயிருந்தால் கூட, ஆசிரியர் குழுவில் யாருமே அதை படிக்காமாலா இருந்திருப்பார்கள். அப்பொழுது ஞானியின் எழுத்தில் எந்த தவறும் காணாத விகடன், கட்டுரை பிரசுரமாகி எதிர்ப்பு கிளம்பியதும், தனக்கு அதில் எந்த சம்பந்தமுமே இல்லாதது போல் ஞானியை மட்டும் பலி வாங்கியது என்ன நியாயம்.

ஒன்று முதலிலேயே ஞானியின் அந்தக் கட்டுரையை, விகடன் ஆசிரியர் குழு நிராகரித்திருக்க வேண்டும். ஆசிரியர் குழுவில் யாருமே அந்தக் கட்டுரையை பிரசுரத்திற்கு முன் படிக்கவில்லை என்றால், இவர்கள் ஆசிரியர் குழு என்று ஒன்று வைத்திருப்பதே வீண்.

இல்லை, ஆசிரியர் குழுவின் ஒப்புதலோடே அந்தக் கட்டுரை பிரசுரமாகியிருந்தால், குறிப்பிட்ட கட்டுரை எழுதியதற்காக ஞானியின் தொடரை நிறுத்தியிருக்க கூடாது. ஏனென்றால் அதை பிரசுரிக்கும் முடிவை எடுத்ததே அவர்கள்தானே.

ஆக, விகடனின் நேர்மை(?) மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.

நீதி :- விகடனில் ஏதாவது தொடர் எழுதிகொண்டிருக்கும்/எழுதப்போகும் எழுத்தாளர்களே, ஜாக்கிரதையாக இருக்கவும்!!!