Friday, September 12, 2008

தமிழ்மணம் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?

சிறிது நேரத்திற்கு முன்பு, பாரிஸ் திவா, மங்களூர் சிவாவின் பெயரை வைத்து இட்டிருந்த அருவருப்பான பதிவின் தலைப்பை பார்க்க நேர்ந்தது. அதை எதிர்த்து இடப்பட்டிருந்த பின்னூட்டங்களின் புண்ணியத்திலேயே, ரொம்ப நேரம் தமிழ்மண முகப்பில் தெரிந்தது. இப்பொழுது அது நீக்கப்பட்டுவிட்டது, என்றாலும், செய்த தவறுக்கு பாரிஸ் திவா மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்காத பட்சத்தில் தமிழ் மணம் ஏன் அவர் மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது? மேலும அவர் பதிவில் பல புதிய படங்களின் வீடியோக்களையும்(முழுப் படம்) போட்டிருக்கிறார். இது திருட்டு வீடியோ குற்றமில்லையா? குறைந்த பட்ச நாகரிகமும் கிடையாது, குறைந்தபட்ச நேர்மையும் கிடையாதா?