Monday, December 24, 2007

வா, வாங்க, வாங்களேன்


நேற்று கிழக்கு பதிப்பகத்தில் நடந்த சந்திப்பில் அகராதி, Spell Check பற்றி பேச்சு வந்தபொழுது, "வா" என்ற சொல்லுக்கு மட்டும் கிட்டத்தட்ட 300 வடிவங்கள் இருப்பதாக சொன்னார்கள்(உதாரணத்திற்குத்தான் சொன்னார்கள்!). அதாவது வாங்க, வருகிறேன், வந்தாய் போன்ற சொற்களெல்லாம் "வா" என்ற வினைச் சொல்லின் வடிவங்களே. சந்திப்பு முடிந்து வீட்டுக்கு வந்ததும்தான் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. 300 வடிவங்கள் என்பது ரொம்பவும் அதிகப்படியாக எனக்கு தோன்றுகிறது. 100 வடிவங்கள் இருந்தாலே அதிகம்தான் என்று எனக்குத் தோன்றுகிறது. எதற்கு வீண் சந்தேகம்?
உங்களுக்குத் தெரிந்த "வா" வடிவ சொற்களையெல்லாம் பட்டியலிட்டு சொல்லுங்களேன். சோதனை செய்து பார்த்து விடுவோம்!!

Monday, November 26, 2007

கவிதை மாதிரி...

உன்னைப் பற்றி நினைப்பதே
முட்டாள்த் தனம், புரிகிறது
ஆனாலும் எனக்கு நினைப்பதற்கு
ஏதாவ தொன்று தேவையிருக்கிறதே!
என்ன செய்யச் சொல்கிறாய்?

Sunday, November 25, 2007

தினமணிக் கதிரில் நிலாரசிகன்

இன்றைக்கு தினமணிக் கதிரில், நண்பர் நிலாரசிகனின் இரண்டு இரு நிமிடக் கதைகளை(14வது கதை, இடுகாடு), அவருடைய வலைபதிவிலிருந்து எடுத்து பிரசுரித்திருக்கிறார்கள். நிலாரசிகனின் எழுத்துக்கள் அச்சுப் பிரசுரம் ஆவது இது முதல் முறை அல்லவென்றாலும், கதை என்ற கூறில், இதுவே அவரின் முதல் அச்சுப் பிரசுரம். அவருக்கு எனது வாழ்த்துக்கள்!!!


பி.கு.: ஏனோ தினமணியின் இணைய தளத்தில் அந்தப் பக்கம் இல்லை.

Tuesday, October 30, 2007

கவிதை மாதிரி...

பிணமான பின்னும்
'கியூ'வில் காத்திருக்கிறேன்,
எரிவதற்காக -
எலெக்ட்ரிக் சிதையில்.

Tuesday, October 23, 2007

விகடன் செய்ததும் நியாயமில்லை

ஞானி எழுதியது சரியா இல்லையா என்பது ஒரு புறம். ஆனால் விகடன் செய்தது சிறிதும் நியாயமில்லை.

ஒரு கட்டுரை பிரசுரத்திற்கு போகும் முன்பே, அது தொடர் கட்டுரையாயிருந்தால் கூட, ஆசிரியர் குழுவில் யாருமே அதை படிக்காமாலா இருந்திருப்பார்கள். அப்பொழுது ஞானியின் எழுத்தில் எந்த தவறும் காணாத விகடன், கட்டுரை பிரசுரமாகி எதிர்ப்பு கிளம்பியதும், தனக்கு அதில் எந்த சம்பந்தமுமே இல்லாதது போல் ஞானியை மட்டும் பலி வாங்கியது என்ன நியாயம்.

ஒன்று முதலிலேயே ஞானியின் அந்தக் கட்டுரையை, விகடன் ஆசிரியர் குழு நிராகரித்திருக்க வேண்டும். ஆசிரியர் குழுவில் யாருமே அந்தக் கட்டுரையை பிரசுரத்திற்கு முன் படிக்கவில்லை என்றால், இவர்கள் ஆசிரியர் குழு என்று ஒன்று வைத்திருப்பதே வீண்.

இல்லை, ஆசிரியர் குழுவின் ஒப்புதலோடே அந்தக் கட்டுரை பிரசுரமாகியிருந்தால், குறிப்பிட்ட கட்டுரை எழுதியதற்காக ஞானியின் தொடரை நிறுத்தியிருக்க கூடாது. ஏனென்றால் அதை பிரசுரிக்கும் முடிவை எடுத்ததே அவர்கள்தானே.

ஆக, விகடனின் நேர்மை(?) மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.

நீதி :- விகடனில் ஏதாவது தொடர் எழுதிகொண்டிருக்கும்/எழுதப்போகும் எழுத்தாளர்களே, ஜாக்கிரதையாக இருக்கவும்!!!

Friday, August 31, 2007

கவிதை மாதிரி


காதல் சாலையில் கொஞ்சம்
கவிதை மழையில் நனைந்த
காற்று வாங்கலாம் என்று
காலாற நடந்து போனேன்.

காற்றடிக்க வில்லை வெறும்
கானல் மட்டுமே தெரியுமென்று
களைப்புறு முன்னே தெரிந்திருந்தால்
கால்வைத்திருக்கவே மாட்டேன் இந்தக்
காளவாயில்.

Thursday, August 9, 2007

மடோனா - லைக் அ பிரேயர்

எனக்குப் பிடித்த இன்னொரு ஆங்கிலப் பாடல்(காட்சியமைப்பில் இல்லை)

Tuesday, August 7, 2007

டோனி ப்ராக்ஸ்டன்

Get this widget | Share | Track details

எனக்கு மிகவும் பிடித்த ஆங்கிலப் பாடல்களுள் இதுவும் ஒன்று. வரிகளும் இசையும் கேட்கும் ஒவ்வொரு தடவையும், ஏதோ செய்கின்றன

Friday, July 27, 2007

வகையில்லாதவை

கதையானது கவிதையானது
காதலானது கல்யாணமுமானதால்
காயமாகிப் போனது

Thursday, June 28, 2007

பதிவுகளும் தமிழும்

தமிழ் பதிவுகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து செல்கிறது. அதே வேகத்தில் தமிழின் தரம் வீழ்ந்தும் செல்கிறது. ஒரு பக்கம் "மொக்கை, அடிவருடி, நாய் .. " போன்ற (இதைவிட மோசமான) வார்த்தைகளால் எண்ணங்களின் தரமும், ('ல','ள','ழ')('ர','ற')(ண,ன,ந) வேறுபாடுகள் பற்றி கவலையில்லாததால் எழுத்தின் தரமும், தமிழுக்கு ஒரு மிக மோசமான சூழ்நிலையை, வலையில் ஏற்படுத்தியிருப்பதாகவே நான் உணர்கிறேன். எண்ணங்களின் தரத்தைப் பற்றி நான் இப்பொழுது எதுவும் கூறப்போவதில்லை. ஏனென்றால், அது உங்களின் தரத்தை பொறுத்தது. குறைந்த பட்சம், எழுத்தின் தரத்தையாவது முடிந்தவரை கெடுக்காமல் இருக்கலாமே!

வர வர இந்த மாதிரி ('ல','ள','ழ')('ர','ற')(ண,ன,ந) வேறுபாடுகள் தெரியாத பலரின் எழுத்துகளை வலையில் படிக்க நேருகிறது. அப்பொழுதெல்லாம் பயங்கரமாக கோபமும் வருகிறது. உங்களுக்கு குறிப்பிட்ட வார்த்தையில் எந்த எழுத்து வரும் என்பது பற்றி சந்தேகம் இருந்தால், அகராதியில் அந்த வார்த்தை எப்படியிருகிறது என்று பாருங்கள். இல்லையென்றால் யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். அப்படியும் தெரியவில்லையென்றால், பேசாமல் அதற்குரிய ஆங்கில வார்த்தையையே எழுதுங்கள். வார்த்தையை தப்பாக எழுதுவதை விட, ஆங்கிலச் சொல்லை உபயோகிப்பது தவறல்ல என்பது என் கருத்து.

சில சமயங்களில் தட்டச்சும்பொழுது, நம்மையறியாமல் கவனக்குறைவாக எழுத்து தவறாகியிருக்கலாம். இது ஒரு பெரிய தவறில்லைதான். எனக்கும் பல முறை நிகழ்வதுண்டு. ஆனால் இதையும் முடிந்தவரை குறைக்கலாம். தட்டச்சு செய்து முடித்த பிறகு ஒரு முறைக்கு மூன்று முறை எழுதியதை படித்துப் பாருங்கள், அவசரமில்லாமல்!! அப்படி படிக்கும்பொழுது எழுத்திலுள்ள கருத்தை கவனிக்காமல் வார்த்தை வார்த்தையாக படியுங்கள். ஏதாவது தவறிருந்தால் அப்பொழுது கண்டிப்பாகத் தெரிய வரும். ஆனால் நம்மில் பலரும் இந்த proofபார்க்கும் வேலையை செய்வதில்லை. தட்டச்சி முடித்ததும் பதிவிட்டிட வேண்டும் என்று அவசரப்படுகிறோம். அவ்வளவு விரைவாக கருத்துக்களை முந்தி தந்து என்ன சாதிக்க போகிறீர்கள்?

ஆனால் இப்படி proof பார்த்து எழுதினால் கூட உங்களுக்கு தப்பு வருகிறதா? பேசாமல் ஒரு நல்ல தமிழ் வாத்தியாரிடம் ட்யூஷன் ('ட்யூஷன்' இப்பொழுது தமிழ் வார்த்தையாகிவிட்டது?!?!) சேர்ந்து விடுங்கள்.

Friday, June 15, 2007

ஏட்டிக்குப் போட்டி



திடீரென்று இந்தப் பாடல் இன்று என்னைப் பிடித்துக் கொண்டு விட்டது. பத்து முறைக்கு மேல் கேட்டுவிட்டேன். இப்பொழுது இதை கேட்கும்பொழுதுதான் புரிந்தது, தொட்டி ஜெயா படத்தில் வரும் "உயிரே என் உயிரே" பாடலில் "எங்கேயோ உன் முகம்; நான் பார்த்த ஞாபகம்; எப்போதோ உன்னுடன்; நான் வாழ்ந்த ஞாபகம்" வரிகள் ஏன் அவ்வளவு கவர்ந்ததென்று(ஒரு நாள் இந்த வரிகளை மட்டும் திரும்ப திரும்ப ஐம்பது தடவைக்கு மேல் தொடர்ந்து கேட்டேன்!!!)


சரி, அதென்ன தலைப்பு ஏட்டிக்குப் போட்டி என்று பார்க்கிறீர்களா? இன்று, மன்னிக்கவும் நேற்று ஒருவர்(!?!) இந்தப் பாடலை வலைப்பதிவில் பாடி ஒலிப்பதிவாக இட்டிருந்தார். ச்சும்மா அதற்கும் போட்டியாக இருக்கட்டுமே என்று இப்படி தலைப்பு வைத்தேன்.

Monday, June 4, 2007

சிறுபான்மையும் பெரும்பான்மையும்

இன்று மின்னஞ்சலில் வந்தது. என்னுடைய சிந்தனையை அப்படியே பிரதிபலித்ததால் அப்படியே பதிகிறேன்.

A group of children were playing near two railway tracks, one still in use while the other disused. Only one child played on the disused track, the rest on the operational track.

The train is coming, and you are just beside the track interchange. You can make the train change its course to the disused track and save most of the kids. However, that would also mean the lone child playing by the disused track would be sacrificed. Or would you rather let the train go its way?

Let's take a pause to think what kind of decision we could make................

scroll down

.

.

.

.

.

.

.

.

scroll down further ...

.

.

.

.

.

.

.

.

Most people might choose to divert the course of the train, and sacrifice only one child. You might think the same way, I guess. Exactly, I thought the same way initially because to save most of the children at the expense of only one child was rational decision most people would make, morally and emotionally. But, have you ever thought that the child choosing to play on the disused track had in fact made the right decision to play at a safe place?

Nevertheless, he had to be sacrificed because of his ignorant friends who chose to play where the danger was. This kind of dilemma happens around us everyday. In the office, community, in politics and especially in a democratic society, the minority is often sacrificed for the interest of the majority, no matter how foolish or ignorant the majority are, and how farsighted and knowledgeable the minority are. The child who chose not to play with the rest on the operational track was sidelined. And in the case he was sacrificed, no one would shed a tear for him.

The great critic Leo Velski Julian who told the story said he would not try to change the course of the train because he believed that the kids playing on the operational track should have known very well that track was still in use, and that they should have run away if they heard the train's sirens. If the train was diverted, that lone child would definitely die because he never thought the train could come over to that track! Moreover, that track was not in use probably because it was not safe. If the train was diverted to the track, we could put the lives of all passengers on board at stake! And in your attempt to save a few kids by sacrificing one child, you might end up sacrificing hundreds of people to save these few kids. While we are all aware that life is full of tough decisions that need to be made, we may not realize that hasty decisions may not always be the right one.

"Remember that what's right isn't always popular... and what's popular isn't always right."

Tuesday, April 24, 2007

Pray for me Brother

ஏ. ஆர். ரஹ்மானின் மற்றுமொரு மாஸ்டர்பீஸ்

Wednesday, April 11, 2007

தமிழ் வளர்த்தோன்

தமிழ் வளர்த்தோன்

தமிழ் வளர்த்தோன்

யான்

தமிழ் வளர்த்தோன்

செந்தமிழை வளர்த்தில்லை

யான்

தெந்தமிழால் யாம் வளர்ந்தோம்!!!

வகையில்லாதது

நீயென்பது நானாகிப் போனால்
நானென்பது யாராகிப் போவேன்?

Friday, March 30, 2007

மொழி - ஒரு விமர்சனம்

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

Wednesday, March 21, 2007

இது என்ன வகை?!?!

நீயாயிருப்பதும்
நானாயிருப்பதும்
யானொன்றும்
யாதறியேன்
பராபரமே

Saturday, March 17, 2007

மதிப்பெண் வேட்டை

இப்பொழுது +2 தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. 10வது ஆரம்பிக்க இருக்கிறது. ஒவ்வொருவரும், தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வித விதமான குறிப்புகளை மாணவர்களுக்கு சொல்லி கொண்டிருக்கிறார்கள். இந்த குறிப்புகளையெல்லாம் கேட்கும் பொழுது சிரிப்புத்தான் வருகிறது(எனக்கு!).

பரீட்சை என்பதன் நோக்கம் என்ன? உனக்கு கொடுக்கப்பட்ட பாடங்களை நீ சரியாக புரிந்து கொண்டிருக்கிறாயா என்று சோதனை செய்து பார்ப்பது. ஆனால் இப்பொழுது பரிட்சைகள் அதற்காகவா நடத்தப் படுகின்றன?

அடுத்த கட்டத்துக்கு செல்ல தேவைப்படும் நுழைவுச் சீட்டு, இப்போதைய தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்கள். அதனால், பரிட்சைகள் புரிந்ததை சோதிப்பது என்பதிலிருந்து விலகி, மதிப்பெண்களை வேட்டையாடுவது என்ற கோணத்தில்தான் அணுகப்படுகின்றன.

மதிப்பெண்களை எப்படியெல்லாம் வேட்டையாடலாம்? முக்கியமான பாயிண்ட்களை அடிக்கோடிட்டு காட்டு! அழகாக எழுது! இத்தனை மதிப்பெண்கள் கேள்விக்கு இத்தனை பக்கங்கள் எழுத வேண்டும்! பதில் தெரியாவிட்டாலும் சும்மா கொஞ்சம் எழுதிவிட்டு வா! போன்ற உபதேசங்கள் நமது மாணவர்களுக்கு எல்லா இடங்களிலிருந்தும் கிடைக்கும் அறிவுரைகள்.

பல ஆசிரியர்கள், "Alternate Question"களில் இந்த பாடத்திலிருந்து ஒரு கேள்வியும், அந்த பாடத்திலிருந்து ஒரு கேள்வியும் கண்டிப்பாக வரும். அதனால் அந்த பாடத்தை படிக்க வேண்டாம். இந்த பாடத்தை மட்டும் நன்றாக படி, என்று அறிவுறுத்துவார்கள்!?! இன்னும் கொஞ்சம் விவரமறிந்தவர்கள், இந்த கேள்விதான் கண்டிப்பாக வரும். அதனால் வேறு எதையும் படிக்க வேண்டாம் என்று கூட சொல்வார்கள்(இப்படிப்பட்ட அறிவுரை ச்மீபத்தில் ரேடியோவில் கூட கூறப்பட்டது!).

இப்படி ஆடப்படும் மதிப்பெண் வேட்டைகளின் மூலம் அந்த மாணவன் பாடத்திலுள்ளதை முழுமையாக புரிந்து கொள்ளுதல் என்பது எங்கே இருக்கிறதென்று தெரியவில்லை? மாணவர்களை குறை சொல்லி பயனில்லை!! என்ன விதைக்கிறோமோ அதுவே ஊன்றி வளரும் பருவமது.

யோசனை கூறும் ஆசிரியர்களின் தவறென்று கொள்ளலாமா? அவர்களும் என்ன செய்வார்கள் பாவம்? அவர்களது மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுப்பதற்கு இவைதான் சிறந்த வழி!?!

கையெழுத்து அழகாக இருந்தால்தான் திருத்துபவர் ஓரளவாவது படிக்கிறார். அதிலும் அவர் கண்ணில் படுவதற்காக அடிக்கோடிட வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் அதை அவர் கவனிக்காமல் விட்டு விடுவார்!!! கையெழுத்து மோசமாயிருந்தாலோ நீ என்னதான் ஐன்ஸ்டீனையே வளைத்து வளைத்து எழுதியிருந்தாலும், அவர் படிக்காமல் குத்துமதிப்பாக ஒரு மதிப்பெண் போட்டு விட்டு, அடுத்த பேப்பரை திருத்த போய் விடுவார்!!!

அவரும் என்னதான் செய்வார் பாவம், ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் இத்தனை பேப்பராவது திருத்தினால்தான், அவர் போட்டு வைத்திருக்கும் பட்ஜெட்டிற்கு தேவையான அளவு காசு கிடைக்கும். அந்தக் கவலை அவருக்கு. அதை விட்டு விட்டு மாணவன் கஷ்டப்பட்டு படித்து எழுதியிருக்கிறானா, இல்லை உள்ளே கதை விட்டிருகிறானா என்றா பார்த்து கொண்டிருக்க முடியும்? அவன் எக்கேடு கெட்டால் அவருக்கென்ன?

இப்படி திருத்தப்படும் விடைத்தாள்களின் மூலம்தான் மாணவனின் அடுத்த கட்டம் சமூகத்தால் தீர்மானிக்கபடுகிறது. எப்படி? மாணவன் தனது பழைய பாடங்களை ஒழுங்காக புரிந்து கொண்டான்/கொள்ளவில்லை என்று!!

அதிக மதிப்பெண் பெற்றவன் புரிந்து கொண்டான். குறைந்த மதிப்பெண் பெற்றவன் புரிந்து சரியாக கொள்ளவில்லை.

உண்மையிலேயே அப்படித்தானா? எனக்கு புரியவில்லை!! உங்களுக்கு புரிகிறதா?

Monday, February 26, 2007

தொடர்ந்து....

நேற்று போன வாரம் சந்தித்த அதே நண்பருடன் பேசி கொண்டிருந்த பொழுது, இந்த விஷயம் தோன்றியது.

நாம் ஒரே விதமான செயல்களை, ஒரு விஷயத்துக்காக தினசரி செய்தோமென்றால், அந்த விஷயத்தில் அடுத்த கட்ட முன்னேற்றம் என்பது ஏற்படாது. அதனால் அப்படிப்பட்ட எல்லா விஷயங்களக்கும் ஒரு தற்காலிக ஓய்வாவது கொடுக்க வேண்டும். இதில் நாம் அன்றாடம் படிப்பதும் எழுதுவதும் கூட அடங்கும்.

இப்படி செய்து பாருங்கள், ஒரு கனமான விஷயத்தைப் பற்றிய புத்தகம் அல்லது புத்தகங்கள், தினத்துக்கு ஒரு ஐம்பது பக்கமாவது படியுங்கள். விஷயம் உங்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்க வேண்டும். ஆனால் இப்படி படித்த விஷயத்தைப் பற்றி, படிக்கும் காலத்திலும், அதற்கு அடுத்த பத்து நாட்களிலும், யாரிடமும் பேசாமலும், படித்த விஷயங்களை நேரடியாவோ, மறைமுகமாகவோ வெளிப்படுத்தாமலும் இருந்து பாருங்கள். ஒன்று படித்த பத்து நாட்களுக்குப் பின் அந்த விஷயம் உங்களுக்கு மறந்து போகும். அல்லது ஒரு வித புதிதாக எதையும் யோசிக்க முடியாத நிலை ஏற்படும்.

நமது மூளை ஒரே நேரத்தில் RAMஆகவும், ROMஆகவும் செயல்படுகிறது. நமக்கு முதலில் அறிமுகமாகும் விஷயங்கள் RAMஇல் சேமிக்கப் படுகிறது. அந்த விஷயம் தேவையானதாய் இருந்தால் கேச்சி(Cache) போன்ற ஒரு தற்காலிக RAMஇல் சேமிக்கப்படுகிறது. தேவையில்லையென்றால், குறிப்பிட்ட குறுகிய காலத்தில் மறந்து, அழிந்து விடுகிறது.

ஆனால் இந்த தேவையான விஷயங்கள் நமது ROMஇல் சேமிக்கப்பட வேண்டுமென்றால், நாம் ஒரு காரியம் செய்தாக வேண்டியிருக்கிறது. அந்த விஷயங்களைப் பற்றி ஏதாவது ஒரு வகையில் வெளிப்படுத்த வேண்டும். பேசுதல், எழுதுதல், மௌனத்தின் மூலம் கூட வெளிப்படுத்தலாம். இப்படி வெளிப்படும் விஷயங்கள்தான் நமது ROMஇல் ஓரளவாவது சேமிக்கப் படுகின்றன. இதற்கப்புறம், நமது ROMஇலிருந்தும், கேச்சியிலிருந்தும் இந்த விஷயங்கள் உடனே அழிந்து போவதால், மூளை ஃப்ரெஷாகி, புதிய விஷயங்களைப் உள்ளே ஏற்றுக்கொள்ள தயாராகிவிடுறது.இந்த உதாரணம் தொடர்ந்து படிப்பதால் ஏற்படுவது.

இந்த "தொடர்ந்து..." பிரச்சனை எல்லாவற்றிலும் உண்டு. தொடர்ந்து எழுதுவதில் உள்ள பிரச்சனை, விஷயங்கள் விரைவாக காலியாதல். புது விஷயங்களின் வரவை விட எழுதும் வேகம் அதிகமாயிருப்பதால், ஒரு நிலையில் எழுத்து சாரமற்று போய்விடும் அபாயம் ஏற்படுகிறது.

நேற்று நடந்த மினி வலைப்பதிவர்கள் சந்திப்பில்கூட ஒரு வலைப்பதிவர் என்னை கேட்டார், "நீங்கள் ஒன்றுமே பேசவில்லையே" என்று. ஏனென்றால் அந்த சந்திப்பில் நான் பேசிய வார்த்தைகளை எண்ணிவிடலாம். நான் "எனது சுபாவமே அப்படித்தான்" என்றேன். பெரும்பாலான நேரங்களில் நான் அப்படி மௌனமாக இருந்தாலும், எப்பொழுதும் "தொடர்ந்து" அப்படியே இருக்க மாட்டேனென்றும், பல சமயங்களில் நன்றாகவே பேசுவேனென்றும், அந்த நண்பருக்கு இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

Monday, February 19, 2007

சர்வாதிகாரமும் - ஜனநாயகமும்

இந்த ஞாயிறன்று (வலைப்பதிவு) நண்பர் ஒருவரை சந்தித்தேன். பேசிக்கொண்டிருந்தபொழுது ஜனநாயகம் பற்றி பேச்சு வந்தது. நான் அனைவரும் கூடி ஓட்டுப்போட்டு ஆள்பவரை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக முறை சரியான முறை கிடையாதென்றேன். பிளேட்டோ கூறியது போல் ஒரு நல்ல சர்வாதிகாரியே, ஒரு நாட்டை ஆள தகுதியானவன் என்றேன். உதாரணத்திற்கு, நான் அலெக்ஸான்டரை(கி.மு.-கி.பி.) சுட்டிக்காட்டினேன்.

அதற்கு அவர், சர்வாதிகாரியினால் மட்டும் எதையும் சாதித்து விட முடியாது. எல்லோரும் அவன் சொல்வதைத்தான் கேட்டு நடப்பார்கள் என்பது நிச்சயமில்லை. ஒரு கட்டளைக்கு கட்டுப்பட்டு நடப்பதும், நடக்காததும், அவரவர் சூழ்நிலைகளையும், மனப்போக்குமே நிர்ணயிக்கிறது.

ஜனநாயகத்தில் என்னதான் தகுதில்லாதவர்கள் ஆண்டாலும், அந்த தலைமைகளை மாற்றிவிடும் வாய்ப்பு, நமக்கு அவ்வபொழுதாவது கிட்டுகிறதென்றார்.

மேலும் சர்வாதிகாரம் வந்தால் அராஜகம்தான் தலைதூக்கும் என்றார். டால்ஸ்டாயின் வார் அண்ட் பீஸை உதாரணம் காட்டினார்.

நான் நல்ல சர்வாதிகாரி என்று நல்லவில் ஒரு அடிக்கோடிட்டேன். அவர் நல்லது என்பதே சார்பானதுதானே. உங்களுக்கு நல்லதாக இருப்பது என்க்கு கெட்டதாக இருக்கலாம் என்றார். இதற்கு அந்த நேரத்தில் என்னால் பதில் பேச முடியவில்லை.

ஆனால் இப்பொழுதும் என் கருத்தில் மாற்றமில்லை. ஒரு நல்ல, நிர்வாகத்திறமையுள்ள சர்வாதிகாரியால் மட்டுமே ஒரு நல்லாட்சியை கொடுக்க முடியும் என்பது எனது கருத்து. மாற்று கருத்துகள் உங்களுக்கு இருக்கலாம். ஆனால் எனது கருத்து இதுதான்.